உறவுகள் மேம்பட...
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:
- நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை(EGO) விடுங்கள்.
- அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்(LOOSE TALKS).
- எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்(DIPLOMACY), விட்டுக்கொடுங்கள்(COMPROMISE).
- சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்(TOLERENCE).
- எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
- உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
தளர்த்திக்கொள்ளுங்கள்(FLEXIBILITY). - மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(COURTESY).
- புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
- பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்.
No comments:
Post a Comment