Friday, November 02, 2007

அந்த நாள் ஞாபகம்

கல்லூரி நாட்களில் வார இறுதியில் நண்பர்கள் நாங்கள் ஊர் சுற்றுவது வழக்கம். ஒரு முறை நான், கார்த்திக், விஜய் மற்றும் மகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஏரல் ஆற்றில் குளிக்கச் சென்றோம். நாங்கள் எப்போதும் பைக்கில் செல்வது வழக்கம். பாதி வழியில் மகியின் பைக்கில் இருந்து கரும்புகை வெளியாக ஆரம்பித்தது. சற்று நேரத்தில் வண்டி நின்று விட்டது. நாங்கள் பல முறை start செய்தும் முடியவில்லை. கார்த்திக் ஒரு குட்டி மெக்கானிக். அவன் பெட்ரோல், ஸ்பார்க் ப்ளக் எல்லாவற்றையும் சோதனை செய்தான் கடைசியில் இஞ்சின் ஆயிலை பார்க்கும் போது மகி ஆயிலை மாற்றாமல் பல ஆயிரம் கிலோமீட்டர் ஓட்டியது தெரியவந்தது.

நானும் கார்த்திக்கும் சென்று இஞ்சின் ஆயில் வாங்கி வந்தோம். புது ஆயிலை மாற்ற பழைய ஆயிலை வெளியேற்ற வேண்டியிருக்கும். ஆயில் டேங்க் போல்ட்டை கழற்றும் போது, அது கைதவறி மண்ணில் விழுந்து விட்டது. விஜய் போல்ட்டை எடுத்து மகியிடம் கொடுத்து "டேய், மச்சான் மண்ணை துடைடா" என்றான். மகி போல்ட்டை வாங்கி வேகமாக மண்ணில் வீசி எறிந்து காலால் நன்றாக தேய்த்தான். நாங்கள் உடனே ஏண்டா அதை தூக்கி மண்ணுல போட்ட என்று கேட்டோம். மகி "நீங்க தானடா மண்ணுல துடைன்னு கொடுத்தீங்க" என்றான். நாங்கள் விழுந்து விழுந்து சிரிப்பதை பார்த்த மகி திருதிருவென முழித்தபடி நின்றிருந்தான். சற்று நேரத்திற்கு பின் சொன்னோம் "டேய்...மகி நாங்க சொன்னது போல்ட்ல உள்ள மண்ணைத் துடைன்னு..ஆனா அது எப்படிடா உனக்கு மண்ணுல துடைன்னு காதுல கேட்டது."

இன்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு வருகிறது. மகி போல்ட்டை வாங்கி எறிந்த விதமும் அதற்கு பின் அவன் முழித்த முழியும் இன்னும் என் நினைவுகளில் இருக்கின்றன.

பி.கு: நண்பன் மகி இப்போது சென்னையில் ஒரு sofware company-ல் பணிபுரிகிறான். அவன் இதை கண்டிப்பாக படிப்பான். பார்ப்போம் படித்து விட்டு என்ன செய்கிறான் என்று.

Friday, October 26, 2007

எனக்குப் பிடித்த கவிதைகள்

தோசைக்காரன்

அம்மா அரைச்ச கொத்தமல்லித் துவையலோடு ரெண்டு
ஆச்சி ஆசையா வச்ச புளிக்குழம்போடு இன்னும் மூணு
ஊத்திக்கடான்னு அக்கா போட்ட
எண்ணெயும் தூளுமாக் கடேசியா ஒண்ணு
எலே தயிரு இருக்குடா. அய்யோ வேணாம்மா.
கைகழுவத் தோட்டம் போக அப்பா சிரிப்பார்.
தோசையிலே அடிச்ச பிள்ளைமார் பிள்ளை இவன்,

ஆச்சி படம் இத்துப்போய்த் தரையில் விழுந்துச்சு.
எடுத்து வச்சுட்டு அப்பாவைத் தூக்கிப் போனபோது
பக்கத்திலே எங்கேயோ தோசைக்கல் தீயற வாடை.

இப்பவும் அம்மா இடுப்பாலே நகர்ந்து
கொல்லையிலே அம்மிப் பக்கம்
மதினி சோறுகொட்டக் காத்திருக்கா.
"உள்ளே ரவைத்தோசை போல இருக்குடா".

அக்கா வீட்டுக்குப் போனபோது
கறிக்குழம்போட தோசை கொண்டுவந்தா.
"அவுகளுக்குப் பழகிடுச்சு. என்ன பண்ண?"
நாம எப்படியோ. தோசை சைவமில்லையா?
அத்தான் சாப்பிட்டுக் கிட்டே போன் போட்டாரு.
அப்புறம் இங்கேதான் வேலை.
போன் அடிச்சீங்கன்னா வெள்ளைக்காரன் பணியாரம்
ஊத்தப்பம் போல அட்டைப் பெட்டியிலே அடைச்சுட்டு
குலை தெறிக்க ஓடிவந்து தருவோம்.
பிஸ்ஸா முப்பது நிமிசத்துலே போய்ச் சேராட்ட
பணம் தரவேண்டாம்னு விளம்பரம்.

கார். பஸ். வெய்யில். மழை.
உசிரு.
கிடக்கு போங்க. அதுவா முக்கியம்?
இன்னும் முப்பது நிமிசத்துலே
நீங்க சாப்பிட்டாகணும்.
இல்லே என் சம்பளத்துலே உங்க சாப்பாடு.

நேத்துக் குறுக்கே புகுந்து வண்டியை ஓட்டினா
பஸ்காரன் கேக்கறான் - "சாவறதுக்கு வந்தியாடா?"

மழையிலே வண்டி மிதிச்சுப் பங்களா படியேறி
மணி அடிச்சேன். காதிலே தண்டட்டியோட அம்மா.
யாரோட அம்மாவோ.
"தோசைக்காரப் புள்ளே வந்திருக்கான்"னாங்க.
எல்லோரும் சிரிக்கிற சத்தம்.
எனக்குத்தான் அழுகை.
லேட்டா வந்திருந்தா அம்மாவுக்கு
என் சம்பளத்துலே தோசை கொடுத்திருப்பேனே.நாள்தோறும்

பெருக்கத் துவங்கி மின்விசிறி நிறுத்த,
பகல் தூக்கம் கலைந்த கிழவி கண்விழிக்க,
காப்பி தந்து, காய் நறுக்கி, காலையில் சுட்டடுக்கத்
தோசைக்கு அரைத்து, முகம் கழுவி, வாசலில்
விளையாடும் குழந்தைகள் படிக்க வைத்து,
சமைத்து, பரிமாறி, தரை துடைத்து,
பாத்திரம் ஒழித்துப் போட்டு,
பசங்களைப் படுக்கையில் விட்டு,
மேயப் பாக்கி இல்லாப் பேப்பரோடு
காத்திருக்கும் கணவன் கண்காட்ட
வரேன் என்று தலையசைத்து இருட்டில்
மாடியேறி, உலர்ந்த துணியும் விரிப்பில்
வடகமும் மொத்தமாகச் சுருட்டி வந்து,
வாசல் கதவடைத்து, கூடத்து விளக்கணைத்து
வாயில் வெற்றிலையோடு ஜன்னலண்டை போனவள்
வானம் பார்த்தாள். பெய் என்றாள்.


இந்த கவிதைகளை "ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைபிரசவம்" தொகுப்பில் இருந்து எடுத்தது. இதை எழுதியது இரா.முருகன் என்னும் கவிஞர். இந்த தொகுப்பில் இதே போல் மேலும் சில நல்ல ரசிக்கத்தக்க கவிதைகள் உள்ளன. அவற்றை அவ்வப்போது வெளியிடுகின்றேன்.

Wednesday, October 24, 2007

ஹேக்கிங் ஊடுருவல் சாதனங்கள் விற்பனைக்கு

கணினி தொழில்நுட்பம் தொடங்கிய நாள் முதலே இந்த ஹேக்கிங் என்ற சைபர் குற்றங்களும் தொடங்கிவிட்டன. பல்வேறு காலக்கட்டத்தில் பல்வேறு விதமாக கணினித் தொழில்நுட்பம் வளர்ந்து வரும்போது அதன் கூடவே ஹேக்கிங் போன்ற சைபர் குற்றங்களும் அதற்கு சமமாக வளர்ந்து நிற்கிறது.

நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி இதனைத் தடுக்க என்னதான் கணினி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி வைத்தாலும் அத்தகைய சாதனங்களின், மென்பொருட்களின் சக்தியையும் கடந்து இன்று ஹேக்கிங் மகா பயங்கரமாக வளர்ந்து நிற்கிறது.

இந்த "வளர்ச்சி"யின் தொடர்ச்சியாக தற்போது ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் விற்பனைக்கு வேறு வந்துள்ளதாம்!

அதாவது "வளர்ந்து வரும்" ஹேக்கர்களுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செக்யூர் கம்ப்யூட்டிங் கார்ப்பரேஷன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது தனிப்பட்ட வைரஸ்கள் முதல் மேலும் எளிதான பல தொழில்நுட்பங்களை விற்பனைக்கு விட்டுள்ளதாம் சில ஹேக்கிங் கும்பல்கள்.

இந்த ஹேக்கிங் சாதனங்களை பயன்படுத்தி ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கேயுரிய பாணியில் கணினித் தாக்குதல்களை செய்யமுடியும்.

தற்போது மட்டும் இதுபோன்ற ஆன்லைன் ஹேக்கிங் கருவிகள் மட்டும் 68,000 உள்ளதாக செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து செக்யூர் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் பெஞ்சமின் லோ கூறியுள்ள கருத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துவதாய் உள்ளது.

"சைபர் குற்றங்கள்" அதிவேகமாக அதிர்ச்சியூட்டும் வளர்ச்சி கண்டு வருகிறது. எந்த ஒரு உயர்ந்த தொழில்நுட்ப பாதுகாப்பு அரணையும் தகர்த்து நெட்வொர்க்குகளை நாசம் செய்ய புதிய மற்றும் நுட்பமான ஹேக்கிங் தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

இதனை சாதித்த பிறகு அவர்கள் அடுத்தபடியாக அதனை விற்பனைக்கும் கொண்டு வந்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த துறை வர்த்தக அளவில் விஸ்வ ரூபம் எடுத்துள்ளது" என்று எச்சரிக்கிறார்.

இந்த ஹேக்கிங் சாதனங்கள் பெரும்பாலும் இலவசமாகவே வழங்கப்படுகின்றன. ஆனால் இதனை செயல்படுத்துவதற்கு திறமை அவசியம். ஹேக்கர்கள் தற்போது எம்பேக் (Mpack), ஷார்க்2, நியூக்ளியர், வெப் அட்டாக்கர் (Webattacker) மற்றும் ஐஸ்பேக் (Icepack) ஆகிய ஹேக்கிங் கருவிகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இவற்றை பயன்படுத்தி எந்த ஒருவரும் எளிதாக ஹேக்கிங்கில் ஈடுபடலாம். இதனால் சைபர் கிரைம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும் அதனுள் நுழைய வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று செக்யூர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது முதல் தர ஹேக்கிங் கருவிகள் 1000 டாலர்களுக்கு கிடைப்பதோடு, 12 மாத தொழில்நுட்ப உதவி வேறு இதில் கிடைக்கிறதாம்.

இந்த ஹேக்கிங் கருவிகள் விற்பனையில் அவர்களுக்கு எந்த வித இடர்பாடும் இல்லை. அதாவது இந்த கருவிகளை பயன்படுத்தி ஹேக்கிங் செய்தாலும், இதனை வடிவமைத்த, விற்பனை செய்த நபர்களை ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் இக்கருவிகள் "இந்த மென்பொருள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே" என்ற பெயரில் உள்ளது.

எனவே ஹேக்கர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த விற்பனையிலும் அவர்கள் கொடிகட்டி பறக்க துணிந்து விட்டார்கள். என்ன செய்யப்போகிறது கணினி பாதுகாப்பு நிறுவனங்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Friday, September 28, 2007

எதிலோ படித்த கவிதை

மகனே...
நீ பிறந்த அன்று
தோட்டத்தில் வைத்தோம்
ஒரு தென்னங்கன்று
எங்கள் வியர்வையில்
நீ உயர்ந்தாய்
நாங்கள் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது
எங்கோ இருந்து நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது
இங்கே இருக்கும் தென்னை மரம்
எங்கள் இருவருக்கும்
சுக நிழலும் சுவை நீரும் தந்துதவுகிறது
ஒரு நாள்...
நீ ஈ மெயிலில் மூழ்கியிருக்கும்போது
எங்களை ஈ மொய்த்த செய்தி வந்து சேரும்
இறுதிப் பயணத்தில்
நீ இல்லாமற் போனாலும்
தென்னை ஓலை
எங்கள் கடைசி மஞ்சமாகும்

-எழுதியவர் பெயர் தெரியவில்லை

Wednesday, September 12, 2007

புதுக்கவிதைகள்

கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
'பாபி' பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)

அருமையாய் நடித்தனர்...
(என டயரியில் எழுதுகிறாராம்)


இலக்கண சுத்தததோடே
எழுதனும் கவிதை என்றார்
கையிலே வாங்கிப் பார்த்துக்
கழிநெடில் விருத்தம் என்றார்
ஒருவரி உரசிப் பார்த்தார்
கருவிளங் காய்ஈ தென்றார்
மற்றொரு வரியைச் சுட்டி
மாற்றிந்தச் சீரை என்றார்
அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்
அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்
கடைசியில் திருப்பிப் பார்த்தேன்
கவிதையைக் காணோம் அங்கே!

Thursday, August 30, 2007

முதன்முதலாய் அம்மாவுக்கு

கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி எல்லோருக்கும் நன்றாக தெரிந்திருக்கும். அவருடைய கவிதைத் தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்று....

முதன்முதலாய் அம்மாவுக்குஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே!
எழுதவோ படிக்கவோ
ஏலாத தாய்பத்தி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் போனேனோ?
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வைரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப?
கத்தி எடுப்பவனோ?
களவாடப் பிறந்தவனோ?
தரணியாள வந்திருக்கும்?
தாசில்தார் இவன்தானோ?
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும
கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே
தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
கொத்தமல்லி வறுத்துவச்சுக்
குறுமொளகா ரெண்டுவச்சு
சீரகமும் சிறுமொளகும்
சேத்துவச்சு நீர்தெளிச்சு
கும்மி அரச்சு நீ
கொழகொழன்னு வழிக்கையிலே
அம்மி மணக்கும்
அடுத்ததெரு மணமணக்கும்
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக் கொழம்புமேல
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வறுமையில நாமபட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
பாசமுள்ள வேளையில
காசுபணம் கூடலையே!
காசுவந்த வேளையிலே
பாசம்வந்து சேரலையே!
கல்யாணம் நான் செஞ்சு
கதியத்து நிக்கையிலே
பெத்தஅப்பன் சென்னைவந்து
சொத்தெழுதிப் போனபின்னே
அஞ்சாறு வருசம்உன்
ஆசமொகம் பாக்காமப்
பிள்ளைமனம் பித்தாச்சே
பெத்தமனம் கல்லாச்சே
படிப்புப் படிச்சுக்கிடே
பணம் அனுப்பி வச்சமகன்
கைவிட மாட்டான்னு
க்டைசியில நம்பலையே!
பாசம் கண்ணீரு
பழையகதை எல்லாமே
வெறிச்சோடிப் போன
வேதாந்த மாயிருச்சே!
வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரைசேத்து விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா?இந்த கவிதையை பாடகர் S.P.B தன் அழகான குரலில் உருக்கமாக பாடியுள்ளார். கவிதையை வாசித்து முடித்த கையோடு இந்த பாடலைக் கேளுங்கள். கவிதையின் மேன்மை உங்களுக்கு புரியும்.


பாடலைக் பார்க்க/கேட்க மேலே கிளிக்கவும்.

Saturday, August 25, 2007

இசை கேட்டு வாழ்வோம்

இசையின் இனிமையில் மயங்காதவர் யாருளர்? இசையில்லாத இவ்வுலகில் யாராவது வாழமுடியுமா? இசை என்பது இசைவிப்பது. விஞ்ஞான ஆராய்ச்சிகள் இசையால் இசைவிக்க முடியாதது எதுவுமில்லை என்கிறது. மனிதரை இசைவிக்க உருவான இசை தாவரங்களை மட்டுமல்ல நோய்களையும் இசைவித்து கட்டுப்படுத்துகிறது. அந்த இசையின் முக்கியத்துவம் என்ன என்பதை சிறிது நோக்குவோம்.


மனித வாழ்வில் இசை என்பது முக்கியமான பங்கை வகிக்கிறது. கருவில் இருக்கும் உயிருக்கு முதலில் வளருவது கேட்டல் புலனே என்றும் பின்னர் வயது முதிர்ந்து இறுதியில் இறக்கும் போது இறுதியாக செயலிழப்பதுவும் அதுவே என்றும் நம்பப்படுகிறது. மானிடவியலாளர்கள் ஆதி மனிதர் பார்க்கும் புலனை விட கேட்கும் புலனையே அதிகம் பயன்படுத்தினார்கள் என்று கூறுகிறார்கள். ஆதி முதல் மொழி கதைக்கப்படாது பாடப்பட்டிருக்கலாம் என்கிறது Charles Darwin-னின் கோட்பாடு. பல நூற்றாண்டுகளாக கவிஞர்களும் தத்துவவியலாளர்களும் இசையின் நோய் நீக்கும் சக்தியைப் போற்றி வந்துள்ளனர். ஒவ்வொரு பண்பாட்டிலும் இசை பிரிக்கமுடியாதபடி இணைந்துள்ளது.


தாலாட்டு என்ற இசையுடனே ஒருவரது வாழ்வு ஆரம்பமாகிறது. பொதுவாக எல்லாப் பண்பாடுகளிலும் தாலாட்டு பாடல்கள் காணப்படுகின்றன. எனவே குழந்தைகள் அனைவரும் பொதுவாக தாலாட்டு இசையுடனேயே உறங்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள் பிறந்தவுடன் முதன்முதல் கேட்பது தாலாட்டு இசையே. எல்லா தாலாட்டுகளும் இனிமையானவை. அவை பெரும்பாலும் நாட்டுப் பாடல் வகையைச் சார்ந்தவை. குழந்தைகளுக்காகத் தாய்மாரால் பாடப்படும் இப் பாடல்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தித் தூங்கச் செய்யும் ஆற்றல் கொண்டவை. German மொழியில் Johannes Brahms என்பவர் தொட்டில் பாடல் எனப்படும் தாலாட்டை Bertha Faber என்ற இளம் பாடகிக்கு குழந்தை பிறந்த போது அவர் தனது குழந்தைக்குப் படுவதற்காக இயற்றினார். ஆங்கிலத் தாலாட்டுகளும் இந்த முதல் ஜேர்மன் தாலாட்டை ஒத்தவை. ஆங்கிலத்தில் lullaby என்று அழைக்கப்படும் தாலாட்டுகள் மிகவும் இனிமையானவை. அதே நேரம் தாலாட்டுகள் பொதுவாக Mockingbird என்றும் அதாவது ஏளனமான அல்லது போலியான அல்லது நகையாடத்தக்கது என்ற கருத்தும் கொண்டது. இவை குழந்தை அமைதியாகி உறங்குவதற்காக பெற்றோருக்கு நன்கு பரிட்சயமான பல போலியான உறுதி மொழிகளை வழங்குவன.


"Hush little baby, don't say a word Momma's going to buy you a mockingbird"

என்று ஆரம்பமாகி முகம் பார்க்கும் கண்ணாடி, குதிரையும் வண்டியும், வேறும் பல விலையுயர்ந்த பொருள்கள் என பல தருவதாக இந்த ஆங்கிலத் தாலாட்டு உறுதி கூறுகிறது.


ஒரு குழந்தை எதிர் கொள்ளும் முதல் நாட்டுப் பாடல் வகை தாலாட்டாகும். பொதுவாக இதற்கு என்று ஒரு எடுத்துக்காட்டு அமைப்பு அதாவது pattern கிடையாது. தாலாட்டுப் பாடப்படும் சூழலையும் அதனைக் கேட்டும் குழந்தையின் தன்மையையும் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு முக்கிய நோக்கம் உள்ளது. மரபு ரீதியான கருத்துகளின் படியும் சடங்கு நடைமுறைகளின் படியும் குழந்தை என்பது வளரும் நிலையில் உள்ள முழுமையடையாத ஒன்றாகும். இந்த நம்பிக்கை தாலாட்டிற்கு குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல், அதன் பாதுகாப்பு, எதிர்காலத்தில் வருவது பற்றிய முன்குறிப்புச் செயற்பாடு அதாவது prognostic function ஆகியவற்றை அளிக்கிறது. இவை ஒவ்வொன்றும் பல்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளன. அடிப்படை நோக்கமான குழந்தையை அமைதிப்படுத்தி உறங்க வைத்தல் என்பது தாலாட்டுப் பாடலின் ஓசைச் சிறப்பால் ஏற்படுகிறது.


மரபு ரீதியான நம்பிக்கைகளின் படி குழந்தை பல ஆபத்துக்களுக்கு உட்படக் கூடியது. சிறப்பாக கெட்ட ஆவிகள் குழந்தைக்கு கேடு விளைவிக்கலாம். இது தாலாட்டுக்கு குழந்தையைப் பாதுகாக்கும் ஒரு செயற்பாட்டையும் வழங்குகிறது. தாலட்டின் வார்த்தைகள் இந்த பாதுகாப்பு வேலையைச் செய்வதால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய வார்த்தைகள் அதனின்று தவிர்க்கப்படும். அத்துடன் நேரமும் காலமும் தெளிவாகக் குறிக்கப்படும். பாதுகாப்புக் கருதி சில நிறங்கள் தாலாட்டில் சேர்க்கப்படுவதில்லை. எப்போதும் தாலாட்டுகள் எனது என்ற சொந்தம் பாராட்டும் தன்மை ஒருமைச் சொல்லைப் பயன்படுத்துவன. இது தாலாட்டைப் பாடும் தாய்மாருக்கு ஒரு வித பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றது. அத்துடன் குழந்தையின் பெயரும் பாலும் அதாவது ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை என்பதும் அவற்றில் இடம்பெறும். குழந்தையைச் சுற்றித் தெய்வங்கள் நிற்பதாக தாலாட்டில் இடம் பெறுவதும் அதன் ஒரு செயற்பாட்டைக் குறிக்கிறது. இதனால் குழந்தை எப்போதும் பாதுகாப்பான சூழலில் இருப்பதுடன் இந்த தெய்வ சக்திகள் கெட்ட சக்திகளையும் அகற்றுகின்றன என்று தாலாட்டைப் பாடுபவர்கள் நம்புகின்றனர்.


தமிழ் தாலாட்டுப் பாடல்கள் குழந்தை அணிந்துள்ள பாதுகாப்பு அம்சங்களான ஆடைகள், அரைஞாண், காப்புகள் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடும். தாலாட்டின் முன்குறிப்பு செயற்பாடு குழந்தை நித்திரையில் வளர்தல், அதன் எதிர்கால வெற்றிகள் பற்றிக் குறிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. மற்றும் குழந்தையை ஆட்டுதல், அதற்கு நீராட்டுதல், உணவூட்டி அரவணைத்தல் பற்றிய விஷயங்கள் குழந்தையின் அங்கங்கள் பற்றிய வளர்ச்சியை மறைமுகமாகச் சுட்டுகின்றன.


தாலாட்டு என்பது நாம் நினைப்பதை விட முக்கியமானது என்பதை அறிஞர்கள் கூறுகிறார்கள். தாய் பாடும் இசையைப் பிறந்தநாள் முதல் கேட்டு வரும் பிள்ளைகள் பின் இசையில் சிறப்புப் பெறவதாக இது பற்றி ஆய்ந்த அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே தாம் தாலாட்டு என்ற அம்சத்தை விட்டுவிடாது வாழ்வுடன் இணைத்து வைத்திருப்போம்.


தாலாட்டின் பின் பாலர் பாடல்களைக் கேட்டு வளரும் பிள்ளை வளர்ந்த பின் எத்தனையோ இசை வகைகளைக் கேட்கிறது. வாத்திய இசை, சாஸ்திரீய சங்கீதம், நாட்டார் பாடல்கள், பக்திப் பாடல்கள், பொப் பாடல்கள், சினிமாப்பாடல்கள் என்று எத்தனையோ இசை வடிவங்கள் உள்ளன. இசை என்பது பொதுவானது என்றாலும் எல்லோராலும் எல்லா வித இசையையும் ரசிக்க முடிவதில்லை. சாஸ்திரீய இசையை அதன் நுணுக்கங்களை ஓரளவிலேனும் விளங்கிக் கொண்டவர்களால் தான் பூரணமாக ரசிக்க முடியும். சினிமாப் பாடல்கள், பொப்பாடல்கள் என்பன பொதுவாக எல்லோராலும் ரசிக்கப்படுவதற்குக் காரணம் அவற்றின் எளிமையான மனதைக் கவரும் இசையே. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் இவ்வாறே பல்வேறு இசை வடிங்கள் காணப்படுகின்றன.


இசை வெறும் மேலோட்டமான ரசனைக்கு மட்டுமே உரியதல்ல. அது உள்ளத்தையும் உடலையும் வசப்படுத்துகிறது. உற்சாகமூட்டுகிறது. 1997 ம் ஆண்டில் எலிகளை வைத்து இசைப் பரிசோதனை செய்யப்பட்டது. சாஸ்திரீய இசையை அதாவது classical இசையை மூன்று வாரங்கள் தொடர்ந்து கேட்ட எலிகள் 90 விநாடிகளில் தமது அடைப்பிடத்திலிருந்து தப்பிச் சென்றன. கடும் இசையைக் (heavy Metal) கேட்ட எலிகள் தப்பிச் செல்வதற்கு 30 நிமிடங்கள் எடுத்தன. அவை முந்திய பரிசோதனைகளில் வலியத்தாக்கும் தன்மை பெற்று ஒன்றையொன்று கொன்றதால் இப்பரிசோதனையின் போது அவை தனிமைப்படுத்தப்பட்டன. மனிதரில் செய்யப்பட்ட இசைப் பரிசோதைனைகளும் இதைப் போன்ற முடிவுகளையே தந்தன. ஆயினும் எலிகளைப் போல அவர்கள் கடும் போக்குப் பெறவில்லை.
Washington பல்கலைக்கழகம் 1994 இல் ஒரு வேலைத்தலத்தில் வேலை செய்பவர்களிடையே ஒரு இசைப் பரிசோதனையை நடத்தியது. Classical இசையைக் கேட்ட மக்கள் அதிக அமைதியும் திருப்தியும் அடைந்தவர்களாகக் காணப்பட்டதுடன் அவர்களது உற்பத்திச் சக்தியும் அதிகரித்திருந்தது. இசை கேட்காது வேலை செய்தவர்களை விட அவர்கள் 25.8 வீதம் அதிக செம்மையாக வேலை செய்திருந்தனர்.


இசையால் நோய் குணமாக்குபவர்கள் இன்னும் ஒரு படி மேலே போய் இரத்த அழுத்தம், (blood pressure) இதயத்துடிப்பு (heart rate) சுவாசிப்பு, (breathing) மூளை அலைகள், (brain waves) மற்றும் immune response ஆகியவற்றில் இசை செல்வாக்குச் செலுத்துவதாகக் கூறுகின்றனர். இது தற்போது மருத்துவத்துறை ஆய்வுகளாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இசையால் நோய் தீர்த்தல் நன்கு ஏற்கப்பட்டுள்ள காரணத்தால் அவுஸ்திரேலியாவில் உள்ள பல வைத்தியசாலைகளில் இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அத்துடன் மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளைகள் பயிலும் விசேட பாடசாலைகளிலும், வயோதிப நிலையங்களிலும் இசையால் குணமாக்கும் முறை பின்பற்றப்படுகிறது. சிறப்பாக மனநோய் உள்ளவர்களுக்கும், அங்கவீனம் உற்றவர்களுக்கும், வயோதிபருக்கும், மன வளர்ச்சி குன்றியவர்களுக்கும் இம்முறை அதிக பயனளிப்பதாகக் கூறப்படுகிறது. பிரிஸ்பேர்ண் ரோயல் சிறுவர் மருத்துவ மனையில் (Brisbane Royal Children's Hospital) 1993ல் இசையால் குணமாக்கும் துறையை ஆரம்பித்த Jane Edwards இவ்வாறு கூறுகிறார்- இசை நோயாளிகளை அமைதியடையச் செய்வதுடன் அவர்கள் அனுபவிக்கும் வலியிலிருந்து அவர்களது மனதை வேறு திசைக்குத் திருப்புகிறது. அத்துடன் இசை அவர்களது மனங்களை உற்சாகப்படுத்துவதுடன் வைத்தியசாலையில் இருப்பதால் ஏற்படும் மனச் சலிப்பையும் போக்குகிறது. அதனால் அவர்கள் நிம்மதியாக உறங்குகின்றனர். இசையால் குணமாக்குதல் என்பது வைத்தியசாலையில் நோயாளிகள் மத்தியில் போய் பாடுவதல்ல. அவரவருக்கு பிடித்த வகையில் இசையை வழங்குவதே. வாத்திய இசை கேட்க விரும்புபவர்களுக்கு முன்னிலையில் வாத்தியம் வாசிக்கப்படுகிறது. பாட விருப்புபவர்களுடன் சேர்ந்து பாடப்படுகிறது. பாடல் கேட்க விரும்புபவர்களுக்கு அதற்கேற்ப வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன.
மூளைக்கும் காதுக்கும் இடையில் அதிக தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கண்களையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகளை விட காதுகளையும் மூளையையும் தொடுக்கும் நரம்புகள் மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் இசையால் நோய் குணமாக்குபவர்கள். நரம்பியல் நோய் வைத்திய நிபுணரான Oliver Sacks பல நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு இசை மிகவும் பயன்படுவதாகக் கூறுகிறார். பாதிப்புக்குள்ளான மூளை நரம்புகளின் தொழிற்பாட்டை மீளமைக்கும் நுண்ணிய சக்தி இசைக்குள்ளது என்றும், ஞாபக மறதி நோய் (Alzheimer) உள்ளவர்கள் தமக்குத் தெரிந்த பாடல்களைக் கேட்பதன் மூலம் தமது பழைய நினைவுகளை மீட்பதில் பெருமளவு பயன் பெறுவதாகவும் கூறுகிறார்.


பூரண வளர்ச்சி பெறமுன் பிறந்த குழந்தைகளின் பாலை உறுஞ்சும் வேகத்தை இசை 2.5 மடங்கு அதிகரிக்கின்றது. இசையால் அவர்களது எடையும் ஏறுகிறது. கடும் வருத்தங்களால் துன்பப்படும் குழந்தைகளின் இதயத்துடிப்பு இசை கேட்ட ஒரு நிமிடத்தில் சீரடைகிறது என்று கூறப்படுகிறது.


1993ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்ட ஆய்வொன்று Mozart's Piano Sonata K448 என்ற இசையைக் கேட்ட கல்லூரி மாணவர்களின் spatial IQ குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்ததாக கூறுகிறது. அதே பல்கலைக்கழகத்தில் 1994ல் செய்த ஆய்வில் preschoolers எட்டு மாதங்கள் keyboard படித்த போது அவர்களது spatial IQ 46 வீதம் அதிகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.


The Secret Power of Music என்ற தனது நூலில் David Tame என்பவர் classical இசையை இடைவிடாது ஒலிபெருக்கி மூலம் தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை நோக்கிச் சாய்ந்துடன் இரண்டு மடங்கு வளர்ச்சியையும் பெற்றதாகக் கூறுகிறார். ஆயினும் Led Zeppelin, Jimi Hendrix ஆகிய இசைகளை தாவரங்களுக்கு வழங்கிய போது அவை ஒலிபெருக்கியை விட்டு எதிர்ப்புறமாகச் சாய்ந்ததுடன் விரைவில் பட்டும் போயின என்று மேலும் அவர் கூறுகிறார். இதிலிருந்து தாவரங்களும் எல்லாவித இசைக்கும் இசையாது என்பது தெரிகிறது. மனிதரைப் போல அவைகளும் இசையைத் தெரிவு செய்கின்றன போலும். இந்தியாவிலும் பல வருடங்களின் முன் கர்நாடக சங்கீதத்திற்கு பயிர்கள் வளர்வது கண்டுபிடிக்கப்பட்டமை பற்றி உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள்.


இசை மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு நான்கு வழிகள் கூறப்படுகிறது.
1. காதைத் துளைக்கும் அலாரத்துடன் நாளைத் தொடங்காது அமைதியான இசையில் ஆரம்பித்தல் வேண்டும்.
2. நடன இசையை கேட்டபடி அங்கங்களை அவை விரும்பிய வகையில் அசைத்தல் வேண்டும். இது மூளையை மீண்டும் சமநிலைப்படுத்துவதற்கு உதவும்.
3. ஹம் பண்ணுதல் சத்தத்திற்கு எதிராக இயங்குமாகையால் சிறிது ஹம் பண்ண வேண்டும். பின்னர் வேகமான இசையுடன் பாடலை விரைவாக முடிக்கவேண்டும்.
4. ஒரு நண்பருடன் இணைந்து இசையுடன் இணையாது அதாவது out of tune இல் மிகப் பலமாகக் கத்திப் பாடவேண்டும்.


பாடுதல் ஆத்மாவுக்கு நல்லது. அநேகமாக எல்லோராலும் பாடமுடியும் என்றும் எமது குரல் நாம் திறப்பதற்காகக் காத்திருக்கின்றது என்றும் கூறப்படுகிறது. பாடல் உடலைத் தட்டி எழுப்புகிறது, பாதிக்கப்பட்ட உணர்ச்சிகளைக் குணப்படுத்துகிறது, மனதைக் குவியச் செய்கிறது. இசையினால் பெரு நன்மைகள் எல்லாம் விளைவதால் இசை கேட்போம், பாடுவோம். ஆரோக்கியமாக வாழ்வோம்.

நன்றி: திண்ணை.காம்

Thursday, August 16, 2007

ஹைக்கூ போட்டி

இங்கே மூன்று கவிதைகளை தருகிறேன். தமிழ் கூறும் நல்லுலகத்தினர் இதில் எது சரியான ஹைக்கூ கவிதை என்பதை பின்னூட்டமிடலாம்.


 1. திண்ணையிலிருந்து
  நிலவை ரசிப்போம்
  தொலைந்தது வீட்டுச்சாவி

 2. மழை வருவதற்குள்
  போய் பார்க்க வேண்டும்
  அவள் போட்ட கோலம்

 3. மறுமுறையும்
  இயேசு வரமாட்டார்
  எல்லார் கையிலும் சிலுவை

Wednesday, August 15, 2007

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


வலைபதிவாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Monday, August 13, 2007

வலைப்பதிவின் வரலாறு

இந்தத் தகவல்களை நான் இணையத்தில் இருந்து எடுத்தேன். இது சரி தானா என்று படிப்பவர்கள் சொல்லலாம்.


* Weblog என்ற பெயர் முதன் முதலில் 17-12-1997 ல் Jorn Barger என்பவரால் உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.* குறுக்க வடிவமான blog என்ற சொல்லை Peter Merholz என்பவரே முதன் முதலில் பயன்படுத்தினார். 1999 ஏப்ரல் அல்லது மே மாதமளவில் இவரது வலைப்பதிவின் பக்கப்பட்டையில் Weblog என்ற சொல் இரண்டாக உடைக்கப்பட்டு we blog என்றவாறு காண்பிக்கப்பட்டிருந்தது.* 1994 இலிருந்து தனது தனிப்பட்ட வலைப்பதிவை எழுதிவரும் Justin Hall என்பவர் வலைப்பதிவின் முன்னோடிகளுள் ஒருவராக பொதுவில் கருதப்படுகிறார்.* 1996 இல் 'Xanga என்ற வலைத்தளம் வலைப்பதிவுச் சேவையை வழங்கத் தொடங்கியது. 1997 அளவில் 100 நாட்குறிப்பேடுகள் அங்கே வைக்கப்பட்டிருந்தன. டிசம்பர் 2005 அளவில் அவற்றின் எண்ணிக்கை 50,000 இனைத் தாண்டிவிட்டது.* ஏறத்தாழ இதே காலப்பகுதியில் blogger.com என்ற வலைப்பதிவுச் சேவை வழங்குநர்கள் தமது சேவையைத் தொடங்கினர். இச்சேவை பின்னர் 2003 பெப்ரவரியில் google நிறுவனத்தினரால் கொள்வனவு செய்யப்பட்டது.* ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் கடைசி நாள் (31.08) அன்று உலக வலைப்பதிவாளர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

Saturday, August 11, 2007

உறவுகள் மேம்பட...

குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க:

 1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை(EGO) விடுங்கள்.
 2. அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்(LOOSE TALKS).
 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையும் நாசுக்காக கையாளுங்கள்(DIPLOMACY), விட்டுக்கொடுங்கள்(COMPROMISE).
 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்(TOLERENCE).
 5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.
 6. உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம்
  தளர்த்திக்கொள்ளுங்கள்(FLEXIBILITY).
 7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்(COURTESY).
 8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.
 9. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவங்க முன்வாருங்கள்.

Thursday, August 09, 2007

சில கவிதைகள்(சற்று வித்தியாசமாக...)

பாம்பு கடித்தும்
வீம்பாய் இருப்பதால்
மூக்கில் ரத்தக்கரை
நாக்கில் சற்று நுரை.

பிடிவாதக் குழந்தையின்
அழுகையை நிறுத்த
முடிவாக ஒருவழி
....................................
வேண்டாம்.

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால்-உள்ளே
திருக்குறள் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.

ஹைக்கு

சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டு கிளம்புமுன்
பூட்டினேனோ?

அமெரிக்கா அமெரிக்கா

காசு போட்டால்
மிஷினிலிருந்து
வேசி கூட வருகிறாள்.

கென்னடியைச் சுட்டுத் தீர்த்த
சன்னல் வழி எட்டிப் பார்க்க
காசு கேட்கிறார்கள்.

நியூஜெர்ஸி நண்பரின்
'ஏஸி' காரில்
காஸ்ட் போட்டால்
'பாசமலர்' பாட்டு.

இந்த கவிதைகளை எழுதியது யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு வாழ்த்து மின்-அஞ்சல் பரிசாக அனுப்பப்படும். உங்களுக்காக ஒரே ஒரு கவிதையை clue-ஆக தருகிறேன்.

ஐன்ஸ்டைன் சொன்னது
அத்தனையும் சத்யமெனில்
இந்தக் கவிதையை
இன்றைக்குத் துவங்கி
நேற்றைக்கு முடிக்கலாம்.

clue-சரியான தமிழ் பதம் என்ன?

Saturday, August 04, 2007

வலைப்பதிவில் என் முதல் youtube video

ச்சும்ம்மா ஒரு sample test...

Monday, July 23, 2007

சில தகவல்கள்...

இந்த தடவை பெண்கள் அணியும் சில அணிகலன்கள் பற்றியும் அதன் பயன்களையும் குறிப்பிடுகிறேன். நான் இந்த தகவல்களை சற்று நாள் முன்னர் தான் வாசிக்க நேர்ந்தது. மேலும் வேறு தகவல்கள்/செய்திகள் நண்பர்களுக்கு தெரிந்திருந்தால் எனக்கு மின்-அஞ்சல் மூலம் தெரியப்படுத்தலாம்.

மெட்டி:

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு மெட்டி அணிவிப்பதை காணலாம். திருமணமான பெண்கள் கால் விரலில் மிஞ்சி அணியவேண்டும் என்பது காலங் காலமாய்ப் பின்பற்றப்படும் தமிழ் மக்களின் சம்பிராதாயச் செயலாகும். [பெருவிரலுக்கு அடுத்த விரலில் இந்த மெட்டி அணிவிக்கப்படுகிறது.]

ஆனால் நாகரிகம் வளர்ந்து விட்ட இக்காலத்தில் திருமணமான பெண்கள் மிஞ்சி அணிய வெட்கப்படுகின்றனர். திருமணமானதற்கு அடையாளமாய் தாலி இருந்தால் மட்டும் போதும், மிஞ்சி தேவையில்லை என அவர்கள் எண்ணுகிறார்கள்.

அந்த விரலிருந்து ஒரு நரம்பு கர்ப்பபைக்கு செல்கிறது.பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும். இதனை எப்போதும் செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது. கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

கொலுசு:

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்.
பொதுவாக, உடல் ரிதியாக ஆண்களைவிட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம். அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக்கூடாது என்பதற்குதான் இந்த கொலுசு. உணர்ச்சிகள் பெருவிரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது. வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது. [சில விவாகரமான விஷயங்கள் *இலை மறை கனியாக* இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்]

அரைநாண் கொடி[அரணாக்கொடி]:

அரைநாண் கொடி[அரணாக்கொடி] உடலுக்கு நடுப் பகுதி இடுப்பு. மேலிருந்து கீழாக, கீழ்லிருந்து மேலாக ஒடும் இரத்தம் இடுப்புக்கு வரும்போது [+ / -- ] சம நிலைக்கு கொண்டு வர இந்த அரைநாண்க்கொடி உதவுகிறது.

இதர விசயங்கள்:

மூக்கு குத்துவது, காது குத்துவது [துளையிடுவது] உடலில் உள்ள வாயுவை [காற்றை] வெளியேற்றுவதற்கு. [ release ]கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம். ஆண்களுக்கு வலப் புறமும் பெண்களுக்கு இடப் புறமும் பலமான, வலுவான பகுதிகளாகும்.

ஞானிகளும் ரிஷிகளும் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை மீது போட்டு தியானம் செய்வார்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யும் போது வலது பக்கமாக சுவாசம் போகும். வலது என்றால் தமிழில் வெற்றி என்று பொருள். வலது பக்கமாக சுவாசம் செல்லும்போது தியானம், பிராத்தனை எல்லாம் கண்டிப்பாக பலன் தரும்.

அதனால் இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது பக்க சுவாசத்திற்கு மாற்றவேண்டும். அதே மாதிரி ஒரு அமைப்புத்தான் மூக்குத்தி.

நமது மூளைப் பக்கத்தில் ஹிப்போதெலமஸ் என்ற பகுதி இருக்கிறது. நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக் கூடிய, செயல்படக் கூடிய அளவு சில பகுதிகள் உள்ளன.

அந்தப் பகுதியில் சில உணர்ச்சி பிரவாகங்கள் உள்ளன. இதனைச் செயல்படுத்துவதற்கு அந்தப் பகுதி துணையாக இருக்கிறது. இப்படி இந்தப் பகுதியை அதிகமாக செயல் படுத்துவதற்கும் பெண்ணின் மூக்கில் இடது பக்கத்தில் குத்தக்கூடிய முக்குத்தி வலது பக்க மூளையை நன்றாக செயல் படவைக்கும்.

இடது பக்கத்தில் முளை அடைப்பு என்றால் வலது பக்கத்தில் நன்கு வேலை செய்யும். வலது பக்கம் அடைத்தால் இடது பக்கம் உள்ள மூளை அதிகமாக இயங்கும்.

இன்றைய நம்முடைய மனித வாழ்க்கைக்கு அதிகமாக இந்த இடது பக்க மூளையை அடைத்துவலது பக்கமாக வேலை செய்ய வைக்கிறோம். அதனால் வலது கை, வலது கால் எல்லாமே பலமாக உள்ளது.

பெண்கள் முக்குத்தி அணியும்போது, முன் நெற்றிப் பகுதியில் இருந்து ஆலம் விழுதுகள் போல்சில நரம்புகள் நாசி துவாரத்தில் இறங்கி கீழே வரும். இப்படி விழுதுகள் மூக்குப் பகுதியிலும், ஜவ்வு போல மெல்லிய துவாரங்களாக இருக்கும். ஆலம் விழுதுகள் போல உள்ள மூக்குப் பகுதியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அந்த துவாரத்தில் தங்க முக்குத்தி அணிந்தால், அந்த தங்கம் உடலில் உள்ள வெட்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும். அதுமட்டுமல்ல, மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

சிறுமிகளுக்கு மூக்குத்தி அணிவிப்பது கிடையாது. பருவப் பெண்களுகே முக்குத்தி அணிவிக்கப்ப்டுகிறது. பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் அதாவது, தலைப்பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும்.

இந்த வாயுக்களை வெளிக்கொண்ருவதற்கு ஏற்படுத்தட்டதுதான் இந்த மூக்கு குத்துவது. மூக்கு குத்துவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகின்றன்.

இன்றைக்கு நாகரிகம் வளர்ந்து விட்டதால் சில பெண்கள் வலதுப் பக்கம் மூக்குத்தி அணிகிறார்கள். ஆனால், சாஸ்திர ரீதியாக இடப்பக்கம்தான் பெண்கள் மூக்குத்தி அணியவேண்டும். இடது பக்கம் குத்துவதால் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனா சக்தியை ஒரு நிலைப்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது. தியானம், பிராத்தனையில் ஈடுபட உதவுகிறது.

உடலிலுள்ள வெப்பத்தைக் கிரகித்து நீண்ட நேரம் தன்னுள்ளே வைத்திருக்கூடிய ஆற்றல் தங்கத்துக்கு இருக்கிறது. தங்க நகைகளைப் பெண்கள் அணிவதன் மூலம் உடலில் ஏற்படும் அதிக வெப்பம் உணர்ச்சியாக மாறுவதிலிருந்து தடைப்பட்டுபோகும். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, ஆகிய நால்வகைப் பண்புகள் உடையவர்களாகத் திகழ முடியும்.

தங்க நகைகள் அணிவதால் உணர்ச்சிப் பிரவாகம் தடைப்பட்டு பெண்களின் உடல் வெப்பம் சம நிலையடைகிறது. இதனால் அவர்களது வாழ்க்கை தர்ம நெறிகளுக்கு உட்பட்டு சீராக அமையும்.

Thursday, July 19, 2007

மீண்டும் பத்து கட்டளைகள்.....

என்ன கொடுமை தர்மா இது என்று நீங்கள் புலம்ப வேண்டாம். நான் பஞ்ச் பாலாவும் அல்ல கருத்து கந்தசாமியும் அல்ல. தமிழ் கூறும் நல்வுலகுக்கு ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது, சொல்லிவிட்டேன்.

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை கடைபிடிப்பது. திருவள்ளுவர் காலத்திலிருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரை தான் இளைஞர்கள். அதன் பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்து விடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு
பாலருக்கும் பொது(ஆண்-பெண்). இனி...

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது... நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8. எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குப் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணண், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

நன்றி: கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா(குமுதம் 1983).

Tuesday, July 17, 2007

ஆத்மா - ஒரு இசைத் தொகுப்பு

"கருத்தின் உறைவிடமாகவும், அழகின் இருப்பிடமாகவும் அமைந்து, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தவாறு வெளிப்படுத்தி உள்ளத்திற்கு உவகையூட்டுவதால் இசை தன்னலம் பழிபாவங்களும் நிறைந்த இந்த உலகைவிட்டு அழைத்துச்செல்கிறது"- என்கிறார் கவிஞர் தாகூர்

இசை மன இறுக்கத்தை தளர்த்துகிறது- கோபதாபங்களை தடுகிறது. உற்சாகத்தை உண்டாக்குகிறது. இரத்த அழுத்தத்தை அமைதிப்படுத்துகிறது. சிந்தனை தெளிவு உண்டாக்குகிறது. நோய்களை தீர்க்கிறது. உயிர் அணுக்கள் வளர இசை உதவுகிறது, என்று அறிவியல் மேதைகள் தங்கள் அனுபவத்தில் சொல்கிறார்கள்.

நான் தினமும் கேட்கும் இசைத்தொகுப்பைப் பற்றி இங்கு உங்களுக்கு சொல்கிறேன். மகாகவி பாரதியின் சில பாடல்கள் "ஆத்மா" தொகுப்பில் வெளிவந்துள்ளன (2000-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது). பாம்பே ஜெயஸ்ரீ அனைத்து பாடல்களையும் அழகாக பாடியுள்ளார். சுரேஷ் கோபாலன் மற்றும் சபேஷ் ஆகியோர் இந்த தொகுப்பிற்கு இசை அமைத்துள்ளனர். பாரதியாரின் பாடல்களான "அக்னி குஞ்சு" , "மனதில் உறுதி வேண்டும்" போன்ற பாடல்களை வெகு வேகமான இசையில் தான் நான் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பில் மிகவும் மென்மையாக, வித்தியாசமானதாக (முக்கியமாக ரசிக்கக் கூடிய) அளித்திருக்கிறார்கள். அதே போல், "சுட்டும் சுடர்விழிதான்..", "நல்லதோர் வீணை" போன்ற பாடல்களை ரொம்பவும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நடையில் கேட்டிருக்கிறேன். இந்த தொகுப்பிலோ, இவ்விரண்டு பாடல்களும் மிகவும் மென்மையாக, ஒரு தாலாட்டினைப் போல் இருக்கிறது. மிகவும் அருமை. ஆனால் எனக்கு மிகவும் பிடித்தது "மழை" என்ற பாடல்தான். ஒன்றரை நிமிடம் தான் வந்தாலும் கேட்டவுடன் தாளம் போட வைக்கும் பாடல் அது. பாம்பே ஜெயஸ்ரீயின் குரல் அப்படியே நம்மை கட்டிப்போட்டுவிடுகிறது. மிகவும் வித்தியாசமான அனுபவம்.

"To look through his eyes, close your own. Open your heart. And allow him to touch Your soul ... your atma"

இணையத்தில் download செய்ய: http://www.tamilbeat.com/tamilsongs/devo/atma/

Wednesday, July 11, 2007

படித்ததில் பிடித்தது

இந்த வருடம் சென்னையில் நடந்த புத்தக (திரு)விழாவிற்கு சென்றிருந்தேன். நான் வாங்கிய புத்தகங்களில் சற்று வித்தியாசமானது எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மற்றும் கழனியூரன் தொகுத்த "மறைவாய் சொன்ன கதைகள்".
இந்தத் தொகுப்பில் 100 நாட்டுபுறக் கதைகள் இடம் பெற்றுள்ளன.
இதுவரை பெரும்பாலும் செவி வழியாகவே அறியப்பட்டு வந்த நாட்டுப்புறப் பாலியல் கதைகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன. பாலியல் தெளிவு எற்படுத்தும் கதைகள், நகைச்சுவைக்காவே புனையப்பட்ட கதைகள், மருவிய கதைகள், உண்மைச்சம்பவங்கள் எனப் பல பரிமாணங்களில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
தமிழில் நாட்டார் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவான தொகுதியாக வெளிவருவது இதுவே முதன்முறை. பாலியல் குறித்த வேடிக்கைகளும் வினோதங்களும் நிரம்பிய இக்கதைகள் காலம்காலமாக சொல்லப்பட்டும், கேட்கப்பட்டும் வருபவை.
மெய்யாகவே சிலர் பாலியல் கதைகள் என்பது அசிங்கம் என்று கருதுகிறார்கள். ஆனால் இந்த நூறு கதைகளை தெரிந்து கொண்டாலே போதும், ஓரளவு பாலியல் ஞானத்துக்கு.
இப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கதைகள் தாத்தா என்கிற 'தாத்தா நாயக்கர்' என்ற கதைசொல்லி சொல்வதாகவே அமைந்திருக்கின்றன. அவர் மூலமாக பல பொதுவான கருத்துக்களையும் முன்வைக்கிறார் ஆசிரியர். 'கெட்ட வார்த்த கத கேக்கிறவன் கெட்டு பொயிடுவான்னு ஒன்னும் கிடையாது. விஷயம் தெரிஞ்சவன் அவ்வளவு சீக்கிரம் கெட்டுப் பொயிட மாட்டான்' என்பது தாத்தாவின் வாதமாக இருக்கிறது.
இதில் சில கதைகளை நான் எனது நண்பர்கள் வட்டாரத்தில் கேட்டதுண்டு. ஆனால் இப்போதும் எழுத்தாளர் தமிழ் மணம் மாறாமல் மண்வாசனையுடன் கதைகளைச் சொல்லும் போது படிக்க மேலும் ஆர்வத்தைத் தூண்டுகிறது.
இப்புத்தகத்தை உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுயிருக்கிறார்கள். இதன் விலை Rs. 230/- மட்டுமே.

திருப்பாவை விளக்கம் பற்றி...

சென்ற பதிப்பில் நண்பர் யோசிப்பவர் திருப்பாவை பாசுரத்திற்கு விளக்கம் சரியாக இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு சரியான விளக்கம் யோசிப்பவர்க்கோ, அல்லது வேறு நண்பர்களுக்கோ தெரிந்தால் பதிப்பிக்கவும்...

Monday, July 02, 2007

திருப்பாவை பாசுரம்

திருப்பாவை பாசுரம் ஒன்று சிவாஜி படத்தில் இடம் பெற்றிருக்கிறது. ஷ்ரேயா introduction பாடலில் கோமதிஸ்ரீ பாடிய மனதை வருடும் பாடல் அது.

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


விளக்கம்
திருமாலே! மணிவண்ணா! மார்கழி நீராட்டத்திற்கு
பெரியோர்கள் அனுஷ்டித்து வந்தவற்றைக் கேட்பாயாகில்
உலகம் நடுங்க ஒலிக்கும் பால் நிறப் பாஞ்சசன்னியம்
போன்ற சங்குகளும், மிகப் பெரிய பறைகளும்,
பல்லாண்டு பாடுபவர்களும், அழகிய விளக்குகளும்,
கொடிகளும், அவற்றிற்கு மேல் கட்டவேண்டிய
சீலைகளும் வேண்டும். ஆலிலைமேல் பள்ளி கொண்டவனே,
இவையனைத்தும் எங்களுக்குத் தந்தருள வேண்டும்.

திருப்பாவை பாசுரம் ஒவ்வொன்றும் "ஏலோரெம்பாவாய்" என்று முடிவதைக் காணலாம். பாவையை அல்லது பாவை நோன்பிற் காலந்து கொள்ளும் பெண்களை விளித்துக்கூறும் வண்ணம் அமைந்த வாய்பாடு போலவே இதனைக் கருதவேண்டும். சிலர் இதனை 'ஏல் ஓர் எம்பாவாய்' எனப் பிரித்துப்
பொருள் கூற முயல்வர். இவ்வாறு பொருள் கூறுவது எல்லாவிடத்திலும் பொருந்திவராது. ஆதலால் அடிநிறைக்கவந்த சொற்றொடராகவே இதனைக் கொள்ளுதல் தகுதி என்று கூறுவர். திருப்பாவையில் 'ஏலோரெம்பாவாய்" என்னும் சொல்லுக்கு முன்னரே பாட்டின் பொருள் முடிவு பெற்றுவிடுவது கருத்திற் கொள்ளவேண்டும். சான்றாக "பாரோர் புகழப் படிந்து" "உய்யுமா றெண்ணி உகந்து" "நீங்காத செல்வம் நிறைந்து" எனப் பாசுர முடிவுகள் (திருப்பாவை 1 - 3) பொருள் முற்றுபெற்று நிற்பதைக் காணலாம். "உம்பியும் நீயும் உறங்கேலோரெம்பாவாய்" (திருப்பாவை - 17) போன்ற பாசுர முடிவுகள் இதற்கு விலக்காக அமையும். எனவே பாவை பாடலுக்கு ஏற்ற மகுடமாகவும், அதே சமயம் அடிநிறைக்க வந்த சொற்றொடராகவும் இதனைக் கொள்வதுவே பொருத்தமாகும். பிற்காலத்தில் வந்த பாவை நூல்களும் "ஏலோரெம்பாவாய்" என்றே முடிவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

Saturday, June 30, 2007

ஜேம்ஸ் தர்பரின் மற்றொரு சிறுகதை-The Little Girl and the Wolf

ஜேம்ஸ் தர்பர் அமெரிக்காவில் உள்ள ஓஹாயோ மாகானத்தில் பிறந்தவர். சிறு வயதில் அவருடைய சகோதரன் எய்த அம்பினால் அவருடைய பார்வை பாதிக்கப்பட்டது. இதனால் மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல் போனாலும் தன்னுடைய படிப்பறியும், எழுத்தாற்றலையும் வளர்த்துக் கொண்டார்.


ஜேம்ஸ் தர்பரின் முதலாவது புத்தகம் "IS SEX NECESSARY?" 1929-ல் வெளியானது. அவர் குழந்தைகளுக்காக "THE 13 CLOCKS" மற்றும் "THE WONDERFUL O" ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் சிறந்த கார்ட்டுனிஸ்டாகவும் விளங்கினார்.

அவருடைய தத்துவங்கள் எல்லாம் தன்னை கிண்டல் செய்து சொல்லிக்கொண்டவை. சிலவற்றை நான் இங்கு தருகிறேன்.

 • The kingdom of the partly blind is little like Oz, a little like Wonderland
 • I'm 65 and I guess that puts me in with the geriatrics. But if there were fifteen months in every year, I'd only be 48. That's the trouble with us. We number everything. Take women, for example. I think they deserve to have more than twelve years between the ages of 28 and 40.
 • Early to rise and early to bed makes a male healthy and wealthy and dead.
 • You can fool too many of the people too much of the time.
 • All men should strive to learn before they die, what they are running from, and to, and why.

ஜேம்ஸ் தர்பரின் மற்றொரு சிறுகதை...

One afternoon a big wolf waited in a dark forest for a little girl to come along carrying a basket of food to her grandmother. Finally a little girl did come along and she was carrying a basket of food. "Are you carrying that basket to your grandmother?" asked the wolf. The little girl said yes, she was. So the wolf asked her where her grandmother lived and the little girl told him and he disappeared into the wood.

When the little girl opened the door of her grandmother's house she saw that there was somebody in bed with a nightcap and nightgown on. She had approached no nearer than twenty-five feet from the bed when she saw that it was not her grandmother but the wolf, for even in a nightcap a wolf does not look any more like your grandmother than the Metro-Goldwyn lion looks like Calvin Coolidge. So the little girl took an automatic out of her basket and shot the wolf dead.

Moral: It is not so easy to fool little girls nowadays as it used to be.

Thursday, June 28, 2007

கவிதை!

நண்பர் நிலாரசிகன் எனது திருமண பரிசாக அவருடைய கவிதைத் தொகுப்பு ஒன்றை பரிசளித்தார். அவர் எனது கல்லூரி வகுப்புத் தோழர். அவர் கவிதை எழுதுவது மட்டுமல்ல, நன்றாக மிமிக்ரியும் செய்வார். எனக்கு தமிழ் கவிஞர்களை, கவிதைகளை அறிமுகம் செய்தது அவர் தான்.

அவருடைய கவிதைத்தொகுப்பில் இருந்து எனக்குப் பிடித்த கவிதை ஒன்றை தருகிறேன்.

அப்பாவுக்கு....

தினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
"எம்பொண்ணு ராஜகுமாரி
அவள திட்டாதே"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

உயிர் வாங்கும் பரிட்சை
நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
"எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
"நல்லா சாப்பிடுடா" என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளை தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
"நல்லா இரும்மா" என்று.

Monday, June 25, 2007

The Unicorn in the Garden

James Thurber(1894-1961), எழுதிய The Unicorn in the Garden என்ற சிறுகதை எனக்கு பிடித்தவைகளில் ஒன்று.

Once upon a sunny morning a man who sat in a breakfast nook looked up from his scrambled eggs to see a white unicorn with a golden horn quietly cropping the roses in the garden. The man went up to the bedroom where his wife was still asleep and woke her. "There's a unicorn in the garden," he said. "Eating roses." She opened one unfriendly eye and looked at him. "The unicorn is a mythical beast," she said, and turned her back on him. The man walked slowly downstairs and out into the garden. The unicorn was still there; he was now browsing among the tulips. "Here, unicorn," said the man and pulled up a lily and gave it to him. The unicorn ate it gravely. With a high heart, because there was a unicorn in his garden, the man went upstairs and roused his wife a gain. "The unicorn," he said, "ate a lily." His wife sat up in bed and looked at him, coldly. "You are a booby," she said, "and I am going to have you put in a booby-hatch." The man, who never liked the words "booby" and "booby-hatch," and who liked them even less on a shining morning when there was a unicorn in the garden, thought for a moment. "We'll see about that," he said. He walked over to the door. "He has a golden horn in the middle of his forehead," he told her. Then he went back to the garden to watch the unicorn; but the unicorn had gone away. The man sat among the roses and went to sleep.

And as soon as the husband had gone out of the house, the wife got up and dressed as fast as she could. She was very excited and there was a gloat in her eye. She telephoned the police and she telephoned the psychiatrist; she told them to hurry to her house and bring a strait-jacket. When the police and the psychiatrist looked at her with great interest. "My husband," she said, "saw a unicorn this morning." The police looked at the psychiatrist and the psychiatrist looked at the police. "He told me it ate a lily," she said. The psychiatrist looked at the police and the police looked at the psychiatrist. "He told me it had a golden horn in the middle of its forehead," she said. At a solemn signal from the signal from the psychiatrist, the police leaped fro m their chairs and seized the wife. They had a hard time subduing her, for she put up a terrific struggle, but they finally subdued her. Just as they got her into the strait-jacket, the husband came back into the house.

"Did you tell your wife you saw a unicorn?" asked the police. "Of course not," said the husband. "The unicorn is a mythical beast." "That's all I wanted to know," said the psychiatrist. "Take her away. I'm sorry, sir, but your wife is as crazy as a jay bi rd." So they took her away, cursing and screaming, and shut her up in an institution. The husband lived happily ever after.

Moral: Don't count your boobies until they are hatched.

Saturday, June 23, 2007

சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது

சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது.

http://www.deathclock.com

இதில் நமது பிறந்த தேதி, மாதம், வருடம், ஆணா, பெண்ணா, நீங்கள் நல்ல்வரா, கெட்டவரா போன்ற தகவல்களை உள்ளீடு செய்தால், உங்களுடைய மரணதேதி எப்பொழுது என்று தெரிந்து விடும். மேலும் அதில் உங்கள் ஆயுளில் ஒவ்வொரு விநாடியும் குறைந்து கொண்டிருப்பதாக பயமுறுத்துகிறது.

நான் எனக்கு ஆயுள் பார்க்கும் போது 2053 என்று காட்டியது. காத்திருக்கிறேன்... பார்ப்போம்.

இந்த தகவல் சரியாக இருந்தால் மினஅஞ்சல் அனுப்பவும்.

Friday, June 22, 2007

மேலும் சில மணவாழ்வு விதிகள்

1. இருவரும் ஒரெ சமயத்தில் கோபப்ப்டாதீர்கள்.
2. வீடு பற்றிக்கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்.
3. வாக்குவாதத்தில் இருவரில் யாராவது வெற்றி பெற்றே ஆகவேண்டுமென்றால், அது மற்றவராக இருக்கட்டும்.
4. அன்போடு விமரிசிக்கவும்.
5. கடந்த காலத் தப்புக்களை சொல்லிக் காட்டாதீர்கள்.
6. உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்.
7. தூங்கப்போகுமுன் சண்டை போட்டு முடித்துவிடுவது உத்தமம், மெகா சீரியல் ரேஞ்ச்சுக்கு இழுக்க வேண்டாம்.
8. தினம் ஒரு முறை பரஸ்பரம் பாராட்டுங்கள்.
9. தப்புச் செய்துவிட்டால், உடனே ஒப்புக் கொள்ளவும், மன்னிப்புக் கேட்கவும் தயாராக இருங்கள்.
10. சண்டைக்கு இரண்டு பேர் தேவை. இருவரில் அதிகம் பேசுபவர் பேரில்தான் தப்பு இருக்கும்.


மேலும் உங்களுக்கு எதாவது புதிய விதிகள் தெரிந்தால் உடன் மின்அஞ்சல் அனுப்பவும்.

Wednesday, June 20, 2007

மகிழ்ச்சியான மணவாழ்வுக்கு பத்து விதிகள்

1. கணவனோ மனைவியோ மற்றவரின் நண்பர்களையோ உறவினர்களையோ கிண்டல் செய்யாமலிருப்பது.
2. கணவன் மனைவியின் உறவினர்கள் பெயர்களைக் கூடிய மட்டும் தெரிந்து வைத்துக் கொள்வது.
3. கணவன் மனைவியை மற்றவர் முன்னால் கிண்டல் செய்யாமல் இருப்பது.
4. எப்பவும் ஆண்களே இப்படிதான் என்று மனைவியும், பெண்களே இப்படிதான் என்று கணவனும் பொதுப்படுத்தாமல் இருப்பது.
5. கணவன் எதையாவது முக்கியமானதைப் படித்துக் காட்டும்போது மனைவி பராக்கு பார்ப்பதோ, அடிக்கடி மணி பார்ப்பதோ, நடுநடுவே கொசு அடிப்பதையோ தவிர்ப்பது.
6. வீட்டில் நெருப்புப் பெட்டி, காபிப் பொடி, பனியன் போன்ற சில அத்தியாவசியப் பொருள்கள் எங்கெங்கே இருக்கின்றன என்று கணவன் தெரிந்து கொள்வது.
7. மனைவியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது கணவன் கவனமின்றி தலையாட்டி விட்டு பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருப்பது.
8. கணவன் மனைவியை கண்ணே, கன்னுக்குட்டி, குட்டிநாயி, என்றும் 'டா' போட்டும் கூப்பிடுவதை முதல் வருஷத்துடன் நிறுத்தி விட்டால் அவன் சுயநிலைக்கு வந்து விட்டான் என்று மனைவி புரிந்து கொள்வது.
9. கணவன் இளவயசுகாரர்களுடன் கிரிக்கெட், ஓட்டப்ப்ந்தயம், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்கள் மனைவி முன்னால் ஆடாமல் இருப்பது.
10. கணவன் மனைவியின் 'டிரஸ்ஸிங் டேபிள்' என்னும் புனிதப் பிரதேசத்தின் பக்கமே போகாமல் இருப்பது.

கண்ணுக்கு தெரியாத கபோதி

'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் சரவணன் ஸ்டேசனில் இருந்து வெளியே வந்த பொழுது,......

"ஹல்ல்ல்ல்லோ சரவணா!!!", குரல் கேட்ட திசையில் குறுந்தாடியுடன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்."நீஈஈ..! அருண் இல்லே! டேய்ய்ய்ய்! எப்படி இருக்கே? பெரிய ஆளாய்ட்ட போலருக்கு. அடிக்கடி பேப்பர்ல பார்க்கிறேன் உன்னை."

"என்ன போட்டிருக்கு?""கலாமுக்கு அடுத்து இவர்தான்னு."

அருண் லேசாய் சிரித்துக் கொண்டான்."வீட்டுக்கு வாயேன். எதிர்தாப்லேதான் வீடு." - அருண்."சரி வர்றேன். ஆனால் காபி கொடுக்கனும். அப்பதான் நான் விஞ்ஞானி அருண் வீட்ல காபி குடிச்சிருக்கேன்னு சொல்லிக்க முடியும்.""கண்டிப்பா."

அருண் வீடு பெரிதாய் இருந்தது. வலது பக்கத்து கதவு 'LAB-Not Allowed' என்றது. அதன் உள்ளே சென்றார்கள். விதவிதமான அளவுகளில் கூண்டுகள். அதில் எலிகள், முயல்கள், குரங்குகள், etc.,. ஒரு பெரிய கூண்டு காலியாய் இருந்தது.

"அருண்! நீ என்ன ஆராய்ச்சி பண்றே? நீ ராக்கெட் அனுப்பிக்கிட்டு இருப்பேன்னு நினைச்சேன். இங்கே ஒரே எலியும், முயலுமா இருக்கு? நீ பிஸிக்ஸ் தானே?""நான் ஒரு பயோ பிஸிக்கல் விஞ்ஞானி. அதுனாலதான் இதெல்லாம்.""இப்ப நீ என்ன ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கே?""நீ Hollow Man படம் பார்தியா?""பார்த்தேன். ஏன் நீயும் அதே மாதிரி மனுஷனை மாயமா மறைய வைக்கப் போறியா?""ஆமாம்.""எப்படி? சிவப்பு கலர் மருந்தை இன்ஞெச்ட் பண்ணா மறையற மாதிரியா!?!""இல்ல. இது கதிர்களின் வேலை. அதோ இருக்கு பார்த்தியா? அந்த மெஷினுக்குள்ள ஒரு மனுஷனையோ, இல்ல வேற ஏதாவது உயிரையோ வைச்சுட்டு, ஒரு பட்டனை அமுக்கினா, அவங்க கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடுவாங்க.""நிஜமாவா!!! இது எப்படி சாத்தியம்?!?""சாத்தியம். நீ H.G.Wells எழுதின Invisible Man படிச்சிருக்கியா?""படம் பார்த்திருக்கேன்.""இதுவும் அதே கான்சப்ட்தான். ஒரு பொருள் ஏன் உன் கண்ணுக்கு தெரியுது தெரியுமா? அந்த பொருளின் மேல் படுகிற ஒளி அலைகள் ஒளி பிரதிபலிப்பும், ஒளி விலகலும் செய்யப்பட்டு, சுற்றிலுமுள்ள ஒளி அலைகளில் இருந்து வித்தியாசப்பட்டு உன் கண்களை அடைகிறது. நீ பார்ப்பது அந்த ஒளி வித்தியாசங்களைத்தான். இந்த வித்தியாசங்கள் இல்லாமல் செய்து விட்டால், அந்த பொருள் உன் கண்ணுக்குத் தெரியாது. இந்த வித்தியாசங்களை ஒளி விலகு விகிதம் என்று சொல்வார்கள். உதாரணத்துக்கு, தண்ணீரின் ஒளி விலகு விகிதமும், கண்ணாடியின் ஒளி விலகு விகிதமும் ஏறக்குறைய சமம். அதனால் கண்ணாடியை தண்ணீரில் வைத்தால், அது கண்ணுக்கு தெரியாது.""இப்ப நீ என்ன சொல்ல வர்ரே?""எப்படி கண்ணாடி தண்ணீரில் தெரியாதோ, அதே மாதிரி மனித உடல் காற்றில் தெரியாமல் செய்யனும். அதுக்கு மனித உடலின் ஒளி விலகு விகிதத்தை, காற்றின் ஒளி விலகு விகிதத்துக்கு மாத்தனும். அப்ப மனித உடல் ஒளி ஊடுருவக் கூடியதா மாறிடும். கண்ணுக்கு தெரியாம மறைஞ்சிடும்!!"
"சரியா புரியலை. இருந்தாலும் நல்லாருக்கு. உன் வேலை எவ்வளவு முடிஞ்சிருக்கு?"
"முடிஞ்சிருச்சி, ஆனா....,""சார், பால்ல்ல்...""கொஞ்சம் இரு, பால் வாங்கிட்டு வந்துர்றேன்."- அருண்.சரவணன் அந்த மெஷினை ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான். அது ஒரு டெலிபோன் பூத் போலத்தான் இருந்தது. சிறிய வாசல். மூன்றுக்கு மூன்று அறை. அதன் உள்ளே போய், அதன் சுவர்களில் குறுக்கும் நெடுக்குமாக பொருத்தியிருந்த பைப் முனைகளைத் தொட்டுப்பார்த்தான்.'இதிலிருந்துதான் கதிர்கள் வெளிப்படும் போல!!!'அதிலிருந்து வெளியேற அதன் வாசல் வெளிச்சுவரில் கை வைத்தான். அப்பொழுது அங்கேயிருந்த சிவப்பு பட்டனில் தவறுதலாய் கைப்பட்டு அழுத்தி விட, அடுத்த வினாடி அவன் மண்டைக்குள் வெடி வெடித்தாற்போல இருந்தது. . . . . . . . கொஞ்ச நேரம், ஒன்றும் புரியவில்லை! ஒன்றும் தெரியவில்லை! தெரிந்ததெல்லாம் வெள்ளை. வெள்ளையை தவிர வேறோன்றும், வெள்ளைதான் தெரிந்தது.

"சரவணா! சரவணா஡஡!" அருண் குரல் மட்டும் கேட்டது."அருண்! அருண்ண்ண்!!!!""எங்கே இருக்கிறாய்?""இங்கே! இங்கே மெஷினுக்குள் இருக்கிறேன்.""என்ன செய்தாய்?" சொன்னான். "ஓ! காட்!!!""ஏன் ஒரே வெள்ளையாய் இருக்கிறது? ஒன்றுமே தெரியவில்லையே!""ஸாரி மை பிரெண்ட். நீ கண்ணுக்கு தெரியாதவனாகிவிட்டாய்! அதே நேரத்தில் கண்ணும்!!"சரவணன் மனதில் கலவரம் மூண்டது."ஏ..ன்? மெஷினில் தப்பா?""இல்லை. சரவணா, கொஞ்சம் பொறுமையாய் நான் சொல்வதைக் கேள். Physicsபடி உன் கண்களில் உள்ள லென்ஸ் ஒளியை உன் ரெட்டினாவில் குவிக்கிறதுனாலதான் உனக்கு கண் தெரியுது. இப்ப ஒளி உன் உடலில் பட்டு விலகாததால், அதாவது ஒளியை உன் கண்ணில் உள்ள லென்ஸ் குவிக்காததால், ஒளி உன் ரெட்டினாவில் குவியவில்லை. மேலும் உன் ரெட்டினாவினால் ஒளி தடுக்கப்பட்டால்தான் உன் மூளை அந்த பிம்பத்தை புரிந்து கொள்ளும். இப்போ ஒளி உன் ரெட்டினா வழியா ஊடுருவி போயிடறதுனால, உன்னால பார்க்க முடியாது.""எவ்வளவு நேரத்துக்கு?""இனிமே எப்பவும்.""அடப்பாவி! போச்சே!! என்ன செய்வேன்? நீயும் உன் ஆராய்ச்சியும் நாசமாய் போக!!!"சரவணன் கத்த ஆரம்பிக்க..."சரவணா! அவசரப்படாதே. இப்ப நீ இருக்கிற நிலைமைல உனக்கு இன்னொருத்தரோட உதவி தேவை. உன்னை நான் பார்த்துக்கிறேன். நீ பதற்றபடாமல் இரு. இப்ப இதுக்கு மாற்று கண்டுபிடிக்க உன்னைத்தான் உபயோகப்படுத்தியாகனும். நீ என் கூட கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணனும். சரவணா இப்ப எங்கே இருக்கே?"சரவணனுக்கு ஏனோ குரங்கு கூண்டுக்கு பக்கத்தில் பார்த்த காலிக்கூண்டு ஞாபகம் வந்தது."உன்னை நம்ப..." அவன் ஆரம்பிப்பதற்க்குள், அருண் அவனை இரும்புப்பிடியாய் பிடித்தான்.ரிப்ளெக்ஸ் ஆக்ஸனில் சரவணன் உத்தேசமாய் குறி வைத்துக் குத்த, அருண் மூக்கில் விழுந்தது. அருண் பிடி தளர... உத்தேசமாய் வாசலை நோக்கி ஒட ஆரம்பித்து, தட்டு தடுமாறி வாசலை கண்டுபிடித்தபொழுது பின்னால்"சரவணா! ஓடாதே! சொன்னாக் கேளு."ஸ்டேசன் வலது பக்கம். ஸ்டேசனை குறிவைத்து குருட்டுத்தனமாய் ஓடினான். வழியில் ஒரு கல்லை எத்தி, நாயை மிதித்து, தாத்தாவை இடித்து...'எவ்வளவு இரைச்சல்! மெயின் ரோட்டுக்கு வந்து விட்டேனோ?!?...'கேள்வி அவன் மனதில் எழுந்தபொழுது, எதிரே வந்த அரசு பேருந்து அவனை அடித்து ஸ்டேசன் வாசலில் வீழ்த்தியது.'என்ன இது! எதையோ மெத்துனு மிதிச்சது மாதிரி இருந்ததே! பாம்பா இருக்குமோ?!?', மனதில் எழுந்த கேள்வியுடன் முரளி ஸ்டேசனில் இருந்து வெளியே வந்தான்...

நன்றி - மகேசன்

Tuesday, June 19, 2007

ஆண்டாள் ஓர் அறிமுகம்!

ஆண்டாளைப் பற்றி சரித்திரக் குறிப்புகள் அதிகம் கிடையாது. குரு பரம்பரைப்படி, ஸ்ரீவல்லிபுத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தை என்று சொல்கிறது. இவளைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார். கோதை என்றால் தமிழில் மாலை. வடமொழியில் வாக்கைக் கொடுப்பவள் என்று பொருள்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகு பார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக்கொடுத்து அனுப்புவாளாம். அதைத் தினமும் செய்து வந்தாள். ஒருமுறை பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார். அடுத்த முறை சூடாத மாலையை எடுத்துக்கொண்டு சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உகப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, 'நம் பெண் மானிடப் பிறவி இல்லை; ஒருவேளை பூமித் தாயாராக இருக்கலாம்' என்று எண்ணி, ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, “நீ யாரை மணம் செய்துகொள்வாய்” என்று தந்தை பெரியாழ்வார் வினவ, அவள்

வானிடை வாழும் அவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் தரிவது ஓர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதும் ஒப்ப,
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க் என்று
உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடர்வக் கென்று பேச்சுப் படில்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே.

[தேவர்களுக்காக அந்தணர்கள் யாகங்களில் சேர்த்த உணவை காட்டில் திரியும் நரி புகுந்து மோப்பம் பிடிப்பது போல, உடலைப் பிளக்கும் சக்கரமும் சங்கமும் தாங்கிய திருமாலுக்கென்று ஏற்ப்பட்ட என் மார்பகங்கள் மனிதர்களுக்காக என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது]

என்று சொல்லிவிட்டாள். அவன் எந்த ஊரான் என்று பெரியாழ்வார் கேட்டு, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் நாணினாள். ‘இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம்? அரங்கனோடு மணம் புரிவதாவது’ என்று பெரியாழ்வார் கவலைப்பட அவர் கனவில் பெருமாள் தோன்றி `"அவளை அலங்கரித்து கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோவில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்குப் பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள்.

இது ஆண்டாளை பற்றி குரு பரம்பரை சொல்லும் ஏறக்குறைய உண்மையின் அருகில் இருக்கும் கதை. இதன் அடிப்படைச் சம்பவங்கள் ஆண்டாளின் பல பாசுரங்களில் இருக்கின்றன. மேலும் கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்பு, 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றி பாசுரங்கள் எல்லாம் இந்த வசீகரமான கதையின் அடிப்படையாகின்றன.

அவைகளில் நமக்கு வெளிப்படும் பெண்ணின் தெய்வீகச் சாயல்களுக்கும் திருமாலை மணக்கும் இச்சைக்கும் பொருத்தமாக, பின்னர்தான் ஆண்டாளின் திவ்ய சரித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல வேண்டும். தெய்வத்தை மணக்கும் பெண் தெய்வீகம் பொருந்தியிருக்க வேண்டும். மானிடருக்குப் பிறந்தவளாக இருக்கக்கூடாது என்று அவள், சனக மன்னர் யாக சாலைக்கு ஸ்தலம் எழுப்பும்போது சீதை கண்டெடுக்கப்பட்டதுபோல் கண்டெடுக்கப்படுகிறாள். ‘நாச்சியார் திருமொழி’யில் வரும் பாடல்கள் அனைத்தும் திருமாலை விரும்பி அவருடன் ஐக்கியமாகிவிடும் இச்சையை வெளிப்படுத்தும் அற்புதமான பாடல்கள். அந்தப் பாடல்களுக்கேற்ப சரித்திரம் பின்னப்பட்டிருக்கிறது என்று நம்பலாம். எப்படியாவது என்னைத் திருமாலிடம் சேர்த்துவிடு என்று காமதேவனை வேண்டிக்கொண்டு நோன்பெடுக்கும் பாடல்களில் துவங்குகிறது நாச்சியார் திருமொழி. அதன்பின் கண்ணனின் லீலைகளில் திளைக்கும் பாடல்கள்; தரையில் வட்டம் வரைந்து அது கூடினால் கண்ணன் என்னுடன் கூடுவான் போன்ற கவிதைத்தனமான விருப்பங்கள்; மேகங்களையும் குயில்களையும் கார்கோடற் பூக்களையும் விளித்து திருமாலைப் பற்றி பேசுவது;ரணமாயிரம் சூழ வலம் செய்யும் கல்யாணத்தைக் கனவு காண்பது; அவன் ஆடையைக் கொண்டு என்மேல் வீசுங்கள், அவன் திருத்துழாயை என் குழலில் சூட்டுங்கள், அவன் மாலையை என் மார்பில் புரட்டுங்கள், அவன் வாய் நீரைப் பருகக் கொடுங்கள், அவன் குழல் ஊதிய துளைவாய் நீரை என் முகத்தில் தடவுங்கள், அவன் அடிப்பொடியை என் மேல் பூசுங்கள்; இப்படி ஆண்டாள் பாசுரங்கள் அனைத்திலும் ஒருவிதமான பாசாங்கற்ற உடல்சார்ந்த விருப்பம் இருப்பதைக் காண்கிறோம். பக்தி மறைமுகமாகத்தான் உள்ளது.

யார் இந்தப் பெண்?

ஆண்டாளின் பாடல்களின் உள்ளடக்கத்திலிருந்து நமக்கு மிக மிக உண்மையான ஒரு பெண்ணுருவம் கிடைக்கிறது. பெரியாழ்வாரின் பாடல்களின் சாயல் இருந்தாலும் அவை ஒரு பெண்ணுக்கே உரிய மென்மையான எண்ணங்கள் வெளிப்படும் பாடல்கள் என்பதில் சந்தேகமே இல்லை. திருமாலின் மேல் அதீதமான விருப்பம் தன் உடலை வாட்டும் ஒரு பெண்ணால்தான் இப்படி எழுத முடியும்.

பிரேமா அருணாச்சலம் எழுதிய ‘பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும்’ என்ற நூலில் பெண் தன் காதல் வேட்கையை வாயினால் சொல்வதற்கு வாய்ப்பூட்டு போடும் தொல்காப்பிய விதியான, “தன்னுள் வேட்கை கிழவன் முற் கிலித்தல் எண்ணும் காலை கிழத்திக்கில்லை” என்கிற தளையை ஆண்டாளே முதன் முதலில் உடைத்தது. ஆண்டாளாகிய பெண் இலக்கியவாதியின் இந்த மரபு மீறலின் குரல் வியப்பானதே” என்கிறார். எனினும் ஒரு தெய்வத்தின் மூலம்தான் இந்த மரபு மீறல் முடிந்திருக்கிறது.

காமமும் காதலும் மிகுந்த இந்தப் பாடல்களை வைணவ சம்பிரதாயத்தில் வேறுவடிவில் பார்க்கிறார்கள். ‘தமிழ் இலக்கியத்தில் வைணவம்’ என்கிற இந்திரா பார்த்தசாரதியின் நூலில் இந்த வரிகள் கவனிக்கத்தக்கவை. இவர் ஸ்ரீ வைணவத்தின் ஒரே பெண் ஆழ்வார். விஷ்ணு பூமியுடன் கொண்ட தொடர்பு நன்கு தெரிந்ததே! மனித குலம் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாக உள்ள பூமி விஷ்ணுவின் கூட்டுறவால் வளமுடையதானது என்பதை மையமாகக்கொண்ட பல கதைகள் தோன்றின. அதனால் காதற் கடவுளான காமன் விஷ்ணுவுடன் இந்த நோக்கில் ஒன்றாகிறான். விஷ்ணு கிருஷ்ணன், காமன் எனப்படுகிறான்; கண்ணனுக்கும் காமனுக்கும் வேறுபாடில்லை. காமனின் பெயரால் திருமால் வழிபடப்படுகிறான். விஷ்ணுவின் பல பெயர்களில் காமனும் ஒன்று என்று மகாபாரதம் கூறுகிறது. ஆகவே இந்த இணைப்பிலுள்ள சிற்றின்பக் கூறு என்பது நாச்சியார் திருமொழியில் உள்ள சிற்றின்பப் பாடல்கள் காமனாக இருந்த கண்ணன் ஆண்டாளிடம் உருவாக்கிய இன்ப உணர்வு மனநிலைகளின் வெளிப்பாடாகும். ஆண்டாளை பூமித்தாயாகவும் விஷ்ணுவை வரங்களை நல்கும் கடவுளாகவும் கொண்டு படித்தால் கோதையின் கதை வேறு பல புதிய பரிமாணங்களைக் கொடுக்கும்.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியின் 143 பாடல்களைப் பலர் பலவிதத்தில் ஆராய்ந்திருக்கிறார்கள். சிலர் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். சிலர் மிக ஆழ்ந்த விசிஷ்டாத்வைதக் கருத்துகளைக் கண்டிருக்கிறார்கள். ஆண்டாளைப் படிப்பவர்கள் ஏதோ ஒரு விதத்தில் அவர் பாடல்களால் பாதிப்பு அடையாமல் இருக்கவே முடியாது.

ஒரு பெண் தன் காதலனை அடையச் செய்யும் பிரார்த்தனைகள், குட்டித் தெய்வங்களிடம் வேண்டுகோள்கள்; சிறு நம்பிக்கைகள் இவைகளை எல்லாம் அழகாகச் சித்திரிக்கும் பலவகைப் பாடல்கள் உள்ளன. அவள் காதலன் மானிடனல்லாமல் திருமால் என்று உயரும்போது அதில் உள்ள காதல் உணர்ச்சிகள் எல்லாம் தூய்மையடைகின்றன. இருந்தாலும் அவள் காட்டும் விருப்பம் மிகமிக மனம் சார்ந்தது. அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும் கொண்டது.

கடவுளா மனிதனா, பக்தியா காதலா என்கிற இருநிலை, நாச்சியார் திருமொழியில் எப்போதும் விரவியிருக்கிறது. ஆண்டாள் தனக்காகப் பாடுகிறார்; சிறுமிகளுக்காகப் பாடுகிறார்; ஆயர்பாடிப் பெண்களுக்காகப் பாடுகிறார்; கூடல் குறிப்புகள் கேட்கிறார். குயில், மேகம் போன்றவற்றைத் தூது விடுகிறார். நேராக வழிபடுகிறார். கனவுகளில் திருமாலை மணந்து கொள்கிறார். இப்படிப் பலவித உணர்வுகளைக் காட்டும் நாச்சியார் திருமொழி, ஓர் இளம் பெண்ணிடம் இத்தனை எண்ணங்களா, சொல்லாட்சியா, இத்தனை அழகான வரிகளா என்று வியக்க வைக்கின்றன. உலக இலக்கியத்தில் வேறு எந்த மொழியிலும் இவ்வகையிலான கவிதைகள் இருப்பதாக தெரியவில்லை. காரைக்கால் அம்மையார், சில சங்ககால அகத்துறைப் பாடல்கள், கன்னடத்தில் அக்கமகாதேவியின் வசனங்கள், மீரா பஜன் போன்றவை ஆண்டாளின் கவிதைகளுக்கு அருகில் வருகின்றன. ஆனால் ஆண்டாள் தருவது முழுமையான உடலையும் உள்ளத்தையும் இரண்டறக் கலக்கும் அனுபவம்.

வாலண்டைன்ஸ் டே- காதலர் தினம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதற்கு ஆண்டாள் தினம் என்று பெயர் மாற்றலாம். அந்த அளவுக்குக் காதல் தெய்வமான மன்மதன் பண்டிகைக்கான விவரங்கள் தருகிறார். மதமத்தம் பூவும் முருக்கம் பூவும் சேர்த்து, சுவரில் மன்மதன் பேரை எழுதி, பெண் கவரிமானைப் பிடித்துக் கட்டி, கரும்பை வில்லாகக் கட்டித்தந்து நெல், கரும்பு, கட்டியரிசி படைத்து, உதடுகளை வெண்மையாக்கி தலையலர்த்தி ஒரு வேளை மட்டும் உண்டு (இது போன்ற பழக்கங்கள் அந்த நாள்களில் இருந்திருக்க வேண்டும்) இவைகள் எல்லாம் செய்கிறேன் திருமாலை மட்டும் எனக்குக் கட்டிவை என்கிறபோது, மிகமிக யதார்த்தமான ஒரு மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும் போது, அதன் குறிக்கோள் கொச்சை நீக்கப்படுகிறது. காமம் காதலாகி பக்தியாகிறது.

பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது. இன்றுகூட பலரை நாம் பாக்கலாம். அவ்வையார், காரைக்கால் அம்மையார், மணிமேகலை, அக்கமாதேவி, மீரா போன்றவர்கள் உதாரணம். இந்த மரபில் வந்த கிறித்தவ கன்னியா ஸ்த்ரீகள், புத்த பிக்ஷுணிகள், பிரம்மகுமாரிகள் இவர்களுக்கெல்லாம் ஆண்டாள் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்பதுதான் அவர்கள் எண்ணங்களின் சாரம். இந்தப் பாடல்களின் ஆழ்ந்த கருத்துகளில் சிற்றின்பத்திலிருந்து பேரின்பம் நாடும் தத்துவத்தையும் பார்க்க முடிகிறது.

நாச்சியார் திருமொழியின் முதல் பத்து பாடல்கள் காமனுக்குத் தொழுதலுடன் துவங்குகிறது. அடுத்த பத்துப் பாசுரங்களை நதிக்கரையில் மணல் வீடு கட்டும் சிறுமிகள், எங்கள் சிறிய வீட்டைக் கலைக்காதே, நாங்கள் போட்ட கோலங்களைச் சிதைக்காதே என்று கெஞ்சும் பாடல்களாக யாத்திருக்கிறார். அடுத்த பத்துப் பாசுரங்களை ஆண்டாள் அதிகாலைப் பொய்கையில் குளிக்கச் சென்ற கன்னிப் பெண்களில் ஒருத்தியாகத் தன்னை எண்ணிக் கொண்டு கண்ணன் அவர்கள் ஆடைகளைக் கவர்ந்து செல்ல அவனிடம் திருப்பித்தா என்று கெஞ்சும் பாடல்களாக எழுதியிருக்கிறார். தலைவனைப் பிரிந்த பெண்கள் அவன் வருவான் என்று நிமித்தம் அறிய தரையில் சுழித்து அது கூடுகிறதா என்று பார்க்கும் வழக்கம் கூடல் குறிப்பு என்று அந்த நாள்களில் இருந்திருக்கிறது. ஆண்டாள் இந்த வகையில் பத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

ஆண்டாள் திருப்பாவை

ஆண்டாள் பாடல்கள் அனைத்திலும் ஒருமித்த கருத்தான கண்ணனை மணப்பதையே எண்ணிக்கொண்டிருப்பதற்கு சிகரம் வைத்ததுபோன்றது திருப்பாவை. ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத் தமிழ்மாலை' என்று போற்றப்படுகின்றன. திருப்பாவை என்பது பின்னர் வைத்த பெயராக இருக்கலாம். முதலில் இதற்கு 'சங்கத் தமிழ்மாலை' என்றுதான் பெயர் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

தொல்காப்பிய நூற்பா பேராசிரியரின் உரையில் பாவைப் பாட்டு என்பது குறிப்பிடப்படுகிறது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.

"நேரிழை மகளிர் வார்மணல் இழைத்த வண்டற் பாவை" என்று நற்றிணையில் உள்ளது. அகநானூறிலும் உள்ள கடற்கரையோரப் பாவை விளையாட்டுகள்தாம் நாளடைவில் சமய வடிவு பெற்றது என்று கூறுகிறார்கள். 'தைந்நீராடல்' என்றாலும் மார்கழித் திங்களில் பௌர்ணமியில் திருவாதிரையில் தொடங்கியதால் இந்த நீராடல் தை மாதத்தில் தொடர்ந்தது. அதனால் தைந்நீராடல் என்பதும் பொருந்தும் என்று இராகவையங்கார் குறிப்பிட்டுள்ளார். எப்படியும் மகளிரின் பாவை நோன்பு பழந்தமிழ் வழக்கம் என்பதில் சந்தேகமில்லை.

கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் செய்வதாக யாத்த முப்பது பாட்டுகளின் மேல் வைணவ ஆச்சாரியர்களுக்கு- குறிப்பாக இராமானுஜருக்கு- மிகுந்த ஈடுபாடு. (அவரை திருப்பாவை ஜீயர் என்றும் அழைப்பர்). இதற்கு வைணவ ஆச்சாரியர்கள் பலர் விளக்கம் எழுதியுள்ளனர். அவைகளில் பெரியவாச்சான்பிள்ளை மூவாயிரப்படியும் அழகிய மணவாளப் பெருமான் நாயனார் ஜகந்நாதாசாரியார் போன்றவர்கள் வியாக்கியானங்களும் முக்கியமானவை.

திருப்பாவையின் முப்பது பாடல்களையும் மார்கழி மாதத்தில் அனுசரிப்பது வைணவர்கள் வழக்கம். பாவை நோன்பு என்பது பெண்கள் பழகும் ஒரு விதமான austerity. இது எல்லா நோன்புகளிலும் இருப்பதைப் பார்க்கலாம். கிறித்தவர்களின் லெண்ட், இஸ்லாமியர்களின் ரம்ஜான் போன்றவையுடன் ஒப்பிட முடிகிறது. எல்லா மதங்களிலும் நம்பிக்கைகளிலும் கடவுளை அடைய கொஞ்சமாவது மெய்வருத்தம் தேவை என்கிற கருத்து அடிப்படையானது. இதன் அதீத வடிவங்கள்தாம் காவடி எடுப்பது, அலகு குத்திக் கொள்வது, முதுகுத் தோலில் கொக்கி வைத்து தேர் இழுப்பது போன்றவை.

ஆண்டாளின் பாவை நோன்புக்கான கிரிசைகள் (காரியங்கள்) எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவை

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யும் ஆறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

"நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோ ம், கோள் சொல்ல மாட்டோம் (குறளை), அதிகாலையில் (நாட்காலே) குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு (ஆந்தனையும்) கொடுப்போம். இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது எம் பாவை நோன்பு."

அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான அன்றாட சங்கதிகள் பல நம்மை பிரமிக்க வைக்கின்றன.

திருப்பாவையில் பொழுது விடிவதற்குரிய அடையாளங்கள் பல கூறப்பட்டுள்ளன. அவை, கீழ்வானம் வெளுப்பது, கோழி கூவுவது, பறவைகள் ஒலிப்பது, முனிவர்களும் யோகிகளும் துயிலெழுந்து செல்வது போன்றவை. அதை விரிவாகக் கீழே பார்க்கலாம். காலை நேரத்தின் பலவித சப்தங்களையும் நடைமுறைகளையும் இயல்பாகச் சொல்லும் திருப்பாவை பக்தியும் இலக்கிய நயமும் கலந்த மிகச் சிறந்த நூல்களில் ஒன்று.

மார்கழி மாதம் பெளர்ணமியில் துவங்குகிறது திருப்பாவை. மார்கழி மாதத்தை வைஷ்ணவமான மாதம் என்று சொல்வார்கள். கண்ணன் கீதையில் "மாஸாநாம் மார்க ஸீர்ஷோ அஹம்" என்னும்போது மாதங்களில் நான் மார்கழி என்கிறார். மழை பெய்து பயிர்கள் விழிக்கும்போது உயிர்களும் விழிக்க வேண்டுமல்லவா? மார்கழி மாதத்தில் மட்டுமில்லாமல் எல்லா மாதங்களிலும் பெண்கள் இப்படியே இருந்துவிட்டால் உலகத்தில் கலகமே இருக்காது என்பது யோசிக்கத்தக்கது. பெண்களின் அழகினாலும் அலங்காரத்தினாலும் போர்களே நிகழ்ந்திருக்கின்றதைச் சரித்திரம் கூறுகிறது.

ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.

ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து
பாழியந்தோளுடை பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரி போல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

வருண தேவனே சிறிதும் ஔதக்காதே (கைகரவேல்) சமுத்திரத்தினுள்ளே புகுந்து அங்கிருந்து நீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி மாலின் திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள் கொண்ட பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல மின்னலடித்து அவனுடைய சங்கம் போல அதிர்ந்து முழங்க அவனுடைய சக்கரத்தால் சிதறப்பட்ட சரங்கள் போல மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ நாங்களும் அந்த மழையில் நனையப் பொழிவாயாக.

மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.