புதுக்கவிதைகள்
கார்டு கவர்களில்
இந்தி எழுத்தை
நன்றாய் அடித்து
மசியால் மெழுகி
அஞ்சல் செய்யும்
தனித்தமிழ் அன்பர்
'பாபி' பார்த்ததும்
இருடிக் கபூரும்
இடிம்பிள் கபாடியாவும்
(ரகரமும் டகரமும் மொழி
முதல் வாரா)
அருமையாய் நடித்தனர்...
(என டயரியில் எழுதுகிறாராம்)
இலக்கண சுத்தததோடே
எழுதனும் கவிதை என்றார்
கையிலே வாங்கிப் பார்த்துக்
கழிநெடில் விருத்தம் என்றார்
ஒருவரி உரசிப் பார்த்தார்
கருவிளங் காய்ஈ தென்றார்
மற்றொரு வரியைச் சுட்டி
மாற்றிந்தச் சீரை என்றார்
அக்கக்காய்க் கழற்றிப் போட்டார்
அருந்தமிழ்ப் பெயர்கள் சொன்னார்
கடைசியில் திருப்பிப் பார்த்தேன்
கவிதையைக் காணோம் அங்கே!
3 comments:
நன்றாயிருக்கிறதே! யாருடையது?
//நன்றாயிருக்கிறதே! யாருடையது? //
இதே கேள்வி என்னுள். தர்மா பதில் தேவை நண்பா
அதிக வேலைப்பளூ காரணமாக பதிலளிக்க இயலவில்லை(???). முதல் கவிதையை எழுதியது
ந.ஜெயபாஸ்கரன். இரண்டாவது கவிதையை எழுதியது ராஜன். இந்தக் கவிதைகளை சுஜாதாவின்
"மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்" என்கிற புத்தகத்தில் இருந்து எடுத்தேன்.
Post a Comment